Monday, November 20, 2017

Sundarakandam


सुंदरे सुंदरो रामो सुंदरे सुंदर: कपि: |

सुंदरे सुंदरी सीता सुंदरे किं न सुंदरम् ||
------------------------------------------------
சுந்தர காண்டத்தில் சீதையை தேடும் பொருட்டு பரத கண்டத்தின் தெற்கு பக்கம் அங்கதன் தலைமையில் சென்ற வானரக் கூட்டம், மகேந்திரகிரி மலையில் தங்கியிருக்கையில், அங்கிருந்த வயது முதிர்ந்த கழுகரசன் சம்பாதியின் அறிவுரையின் படி, அனுமான் வானில் பறந்து, கடலைக் கடந்து இலங்கை சென்றான்.
இலங்கையின் அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை, அனுமார் சிறு குரங்கு வடிவில் சந்தித்து, இராமரின் கணையாழி மோதிரத்தை சீதையிடம் கொடுத்து, தன்னை இராமதூதன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சீதையும் தனது நெற்றிச் சூடாமணி நகையை, அனுமாரிடம் கொடுத்து, இராமர் ஒரு மாதத்திற்குள் இராவணன் மீது போர் தொடுத்து தன்னை விடுவிக்க வேண்டிக் கொள்கிறாள்.
பின்னர் அரக்கர்களிடம் வேண்டுமென்று சிக்கிக் கொண்ட அனுமாரின் வாலில் தீ வைக்கப்பட்டது. அனுமரும் வாலில் வைக்கப்பட்ட தீயுடன் இலங்கை நகரைச் சுற்றி வந்து, நகரின் பெரும்பாலான பகுதிகளை எரித்தார். பின்னர் அனுமாரைப் பிடிக்க வந்த சம்புமாலி , பஞ்ச சேனாபதிகள் , மற்றும் இராவணன் மகன் அட்சயகுமாரன் ஆகியோர் அனுமரால் கொல்லப்பட்டனர். பின்னர் கண்டேன் சீதையை எனக் கூறிய படி, இராமரிடம் சீதை கொடுத்த சூடாமணியை அனுமார் கொடுத்ததுடன், சீதையின் செய்தியையும் கூறினார்.

சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் அல்லது கேட்டால் உரிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

No comments:

Post a Comment