Monday, August 7, 2017

My Journey of Nama Sankeerthanam

எனது 60 வருட நாம ஸங்கீர்த்தன அனுபவங்களை இந்தப் பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். 
1956-57 களிலில்  திருவல்லிக்கேணி திரு.ராகவாச்சாரி அவர்கள், 14, தெற்கு மாடவீதியில் உள்ள அவர் இல்லத்தில் நடந்த நாம சங்கீர்த்தன குழுவில் நானும்  பங்கு வகித்து, வீதி பஜனைகளில் வலம் வந்த பிராயம். திரு.தாஸ் என்பவர் ஹார்மோனியத்தில் இசை மழை பொழிய, திரு வேணு என்பவர் நந்தி போல ம்ருதங்கம் வாசிக்க, திருவல்லிக்கேணியின் நான்கு மாடவீதிகளில், தெருக்களை அடைத்தவாறு வலம் வந்த நாட்களை சிறிதே எண்ணிப் பார்த்தேன். எனது தந்தை திரு.ராகவன் (ராகஸ்ரீ) வேங்கட சுப்பய்யார் ஸாஹித்யங்களைப் பாடவைத்து எனது நாம ஸங்கீர்த்தன பயணத்தை ஆரம்பித்து வைத்தார். 
மேலும் வெங்கடாசலம் செட்டித்தெருவில் அமைந்த பாண்டுரங்க பஜனை மண்டலியில் நாம சங்கீர்த்தனக் குழுவில் என்னைப் பாடவைத்து, நாம ருசியை அனுபவிக்கக் கற்றுக்கொடுத்தார். திரு.நாட்டண்ணாஜி ராவ், திரு.நாராயண சாஸ்த்ரி, திரு.க்ருஷ்ண ஐய்யர், திரு.சந்தானம் ஐய்யர், பூஜ்யஸ்ரீ ஹரிதாஸ் அவர்கள், திரு.க்ருஷணமூர்த்தி பாகவதர்  என்ற பல ஜாம்பவான்கள் தங்களது சிம்மக் குரலில் பாடி, அந்த பாண்டுரங்கனையே நேரில் கொண்டு வந்து நிறுத்திய ஸ்தலத்தில் நானும் பல வருடங்கள் நாம சங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ளும் ஒரு ஆன்மீக அனுபத்தை, எனது தந்தை மறைந்த பின், எனது அம்மான் திரு.நாராயண ஐயங்கார் வளர்க்க ஏதுவாக இருந்தார்.  
பூஜ்யஸ்ரீ திரு.நாராயண ஐயங்கார் 1956ல்,  சனிக்கிழமை நாம சங்கீர்த்தனத்தை ஆரம்பித்து, என்னை அதில் ஊக்குவித்து, ஹார்மோனியம் பயில உதவி, இன்றும் அதன் தொடர்ச்சி நடந்து வருகிறது.
பூஜ்யஸ்ரீ திரு.நாராயண ஐய்யங்காரின் 14வது ஆராதனை விழா நடக்கும் இந்தத் தருணத்தில் அவர் அனுபவித்த பல பாடல்களை “YouTube“ல் பகிர்ந்துள்ளேன். 
உங்களுடன் நானும் அனுபவிக்கும் – லக்ஷ்மீ நரசிம்மன். 
Poojyasri Nathamuni Narayana Aiyangar Aaradhanam 
on 8th August 2017 will be between 02.00pm to 7.30pm. 
The live telecast can be seen by entering the following 
"You Tube" link. 
Be blessed by watching the live telecast 
and feel the presence of being with us.

No comments:

Post a Comment