Tuesday, April 5, 2016

Mruthasanjeevanam - Drama Introduction

मृतसञ्जीवनम्
नान्दी प्रस्ताव:  கடவுள் துதி
श्रीरञ्जित: कचपरिष्कृत बर्हि बर्ह:
इन्द्रस्तुत: प्रणमतां धिषणानुकूल:
शुक्रेतराम्बुदवपु र्वृषपर्वकारि
श्वश्श्रेयसं दिशतु व: खगदेवयान:
பிராட்டியை (श्रिरञ्जित) மகிழ்விப்பவன்; தலைமுடியை மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட மயில் தோகையைக் கொண்டவன் (कचपरिष्कृत). இந்தரனால் துதிக்கப்பட்டவனாய் (इन्द्रस्तुत) வணங்குபவர்களின் புத்திக்கு அனுகூலமாய் இருப்பவன் (धिषणानुकूल:). வெள்ளையில்லாத கருப்பான மேகத்தைப் போன்ற உடலை உடையவன் (शुक्रेतराम्बुदवपु:) (ஸ்யாமள மேனியன்). தேவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவன்.(वृषपर्वकारी). பக்ஷிகளின் தேவனான கருடனை வாகனமாகக் கொண்ட ஸ்ரீமன் நாராயணன்
(खगदेवयान:) உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் அளிக்கட்டும்.
===========================================================
(நாடகத்தின் இயக்குனர் உள்ளே வருகை)
சூத்ரதாரி: இந்த அவையில் உள்ளவர்கள் தேர்ந்த சிறப்பு அறியுடையோர் ஆவார். அவர்களைக் கண்டவுடன் வர்ணனை செய்ய வேண்டும் போலுள்ளது.
पक्ष्मक्षेप विवर्चितं कुतुकमन्दोच्छ्वास निश्श्वासकम्
प्रत्यंश प्रतिबोधनाय निगृहीतान्योन्यसम्भाषणम्
दोषोन्मेष धृतक्षमांगुण मभिज्ञात प्रयोगश्रमम्
सोल्लासं रसभावुक सद इदं मोदाय मे कल्पते
கண்களை இமைக்காமல் இருப்பவர்களாயும், உணர்ச்சி மேலிட்டு சுவாசிப்பதையே சிறிதே நிறுத்தி பெருமூச்சுவிடுபவர்களாயும், நாடக அரங்கில் காட்சியில் பேசுவதைக் கேட்பதற்காக கருத்துடன் கவனிப்பதால் ஒருவரோடொருவர் பேசாமல் இருப்பவர்களாயும், ஒருவேளை ஏதாவது நாடகத்தில் குறையிருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் பொருமையாக காண்பவர்களாயும், இந்த நாடகத்தை நடத்துவதற்காக நாங்கள் அனுபவித்த கஷ்டங்களை உணர்ந்தவர்களாயும், ரஸபாவம் நிறைந்தவர்களாயும் இந்த அரங்கில் நாடகத்தைக் காண வந்துள்ள பார்வையாளர்கள் உள்ளனர் என்று எனக்கு தோன்றுகிறது.
सामाजिका स्समयपालन माद्रियन्त:
स्वस्वासनानि खलु नीरव मध्यतिष्ठन्
तस्मा द्विलम्बकरणं न् हि साधु मन्ये
இங்கு வந்துள்ள பார்வையாளர்கள் காலம்தவறாமையுடனும், சிறிதும் சப்தம் ஏற்படுத்தாமல் அமைதியாகவும், அவரவர்கள் இருக்கையில் அமர்ந்தும் உள்ளார்கள். அதனால் காலம் தாழ்த்துவது என்பது சரியல்ல. குதிரை போன்று நடக்கும் இந்த பெண்மணி ஏன் இன்னும் காலம் கடத்துகிறாள்.
நாடகப் பெண்மணி : (பரபரப்பாக உள்ளே நுழைகிறாள்): மதிப்பிர்குரியவரே கோபப்படாதீர்; இதோ நான் வந்துவிட்டேன். “குதிரை போல் நடப்பவளா”?
சூத்ரதாரி: காதில் விழுந்ததா என்ன? அது நீதான்.
நாடகப் பெண்மணி (கோபத்துடன்) : மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பேச்சு;, சுந்தரமாகவும், நந்தவனம் போல் அழகாய் உள்ளாய் என்றும், முத்துப் போன்ற சிரிப்பை உடையவள் என்றும், எனது முன்னால் பேசுகிறீர்கள். நான் இங்கு இல்லாவிடில் குதிரை மாதிரி, யானை மாதிரி நடக்கிறேன் என்பதா?
சூத்ரதாரி: ஏ ஸகீ, கோபப்படாதே! நான் சொன்னதில் என்ன தவறுள்ளது. என்னால் ஆணையிடப்பட்ட செயலை விரைவாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
நாடகப் பெண்மணி: வார்த்தைகளை மாற்றிப் பேசுவதில் நீங்கள் மிகவும் சாமர்த்தியசாலி ஆவீர்.
சூத்ரதாரி: அது சரி, நாம் இருவரும் சண்டையிட்டால், பொதுஜனம் பயப்படப் போகிறார்கள். எல்லா நடிகர்களும் தயார் நிலையில் உள்ளனரா? 
நாடகப் பெண்மணி: எல்லோரும் தயாரக உள்ளார்கள். இந்த சபை எந்த நாடகத்தினால் அலங்கரிக்கப்பட உள்ளது? சொல்லுங்கள்!
சூத்ரதாரி: எல்லோரும் கேளுங்கள்!
संगीतसाहित्य कलाविमर्द
प्रोढोऽस्ति नल्लान्कुल कृष्णमार्य:
तस्य प्रबन्धो मृतजीवनाख्यो
दृश्य स्स कुर्या त्परिषत्सपर्याम्
ஸங்கீத ஸாஹித்ய கலைகளிலும் நன்கு கைதேர்ந்தவரான
நல்லான்குல (ஸ்ரீவத்ஸகோத்ரம்) க்ருஷ்ணமாச்சாரியார் என்பர் உள்ளார்.
அவருடைய “ம்ருதஜீவனம்” என்ற நாடகம் காண உள்ளது.
இந்த சபையானது அந்த நாடகத்தின் மூலமாக மரியாதை செய்யப்படட்டும்.
நாடகப் பெண்மணி: நாம் இங்கிருந்து நகர்ந்து, நாடகம் நடத்த, இந்த இடத்தை தரலாம்.
சூத்ரதாரி: நன்றாகச் சொல்லப்பட்டது!
 (திரை விழுகிறது)

No comments:

Post a Comment