Wednesday, March 30, 2016

Jagannath Pandit Won "Lavangi" from Jahangir for Chess

சமஸ்க்ருத கவிகளின் ஜீவிதம் பற்றிய ஒரு புத்தகத்தினை படித்த போது வ்யாஸர், வால்மீகி, காளிதாசர், ஹர்ஷவர்தனர், பவபூதி, பாணபட்டர், பாச என்பவர்களுடன் ஜகன்னாத பண்டிதர் என்பவரைப் பற்றி எழுதியதையும்  படித்தேன் . அதனால் அவரைப்பற்றி அறிய, வலைத் தளத்தில் தேடுகையில் மிகவும் அரிதான பல விஷயங்கள், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கிழக்கு கோதவரிக் கரையில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த ஒரு உஞ்சவ்ருத்தி ப்ராமணர்,  வடக்கே சென்று, அப்பொழுது தில்லியை ஆண்ட முகலாய சக்ரவர்த்தியின் சபையில் இருந்தார் என்று படிக்கும் பொழுது அவரைப் பற்றின மேலும் பல தகவல்களை வலையில் படிக்க, தேடினேன். அதன் தொகுப்பு, அவரைப் பற்றி அறியாதவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விஷயமாகும்.
ஜகந்னாத பண்டித ராயா (வடக்கே அவரை பண்டிட்ராஜ் ஜகந்நாத் என்று அழைப்பர்) ஜஹாங்கீர், ஷாஜஹான் போன்ற முகலாயப் பேரரசர்கள் ஆண்ட போது அவர்களது அரசவையில் ஒரு கவியாகவும், ஒரு ப்ரசித்தியான பாடகராகவும், சமஸ்க்ருதத்தில் பண்டிதராகவும் அலங்கரித்தார். ஸமஸ்க்ருத வரலாற்று இடைக் காலத்தில் வடக்கே ப்ரசித்தி பெற்ற ஒரு கவியாகத் திகழ்ந்தார். இவர்காலத்திற்கு முன் ப்ரசித்தமான ஆனந்தவர்தனரின் த்வன்யலோகா, மம்மதாவின் காவ்யப்ரகாசா என்ற காவியங்களுக்கு இணையாகக் கூறுமாறு இவரது “ரஸகங்காதரா” வைச் சொல்லுவர். தில்லி,ஆக்ரா போன்ற இடங்களில், ப்ரசித்தமான  கவி, புதுமையான கவிதை எழுதுவதில் வல்லவர், சங்கீதம் மேலும் கவிதையை விமர்சிப்பவர் என்ற பல கோணங்களில் இவரது புகழ் மிளிர்ந்தது. அன்றய நாளிலேயே முகமதிய ராஜகுடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணை மணந்து ஒரு புரட்சியும் செய்துள்ளார். அத்துடன் நில்லாமல் தனது முதல் மனைவியைப் பற்றியும், இரண்டாவது மனைவியான முகமதிய ராஜகுடும்பப் பெண்ணைப் பற்றியும் இரண்டு காவியங்கள் எழுதியுள்ளார். இவரது வாழ்க்கையில் இவ்வாறானா மாற்றங்களுக்கு ஏற்படக் காரணம் ஒரு சிறிய வழக்கு.
கிழக்கு கோதாவரி மாகாணத்தில் உள்ள முங்கந்தா என்ற ஒரு கிராமத்தில் உபத்ரஷ்டா என்ற ஒரு குடுப்பத்தைச் சேர்ந்தா இவர் உஞ்சவ்ருத்தி செய்து வாழ்ந்து வந்தார். அவர் அந்த கிராமத்தில் உள்ள ஆலமரத்திலிருந்து விழும் இலைகளை சேகரித்து, அதனைக் கொண்டு சாப்பாட்டு தட்டினை செய்து உண்டு வந்தார். அந்த மரம், அது உள்ள இடம் எல்லாவற்றையும் ஒரு போர் வீரன் “ஜாகீராக” அரசனிடம் பெற்றாதால், இவர் அங்கு இலை சேகரிப்பது தடுக்கப்பட்டது. உடனே அவர் அங்கு உள்ள கர்ணத்திடம் சென்று முறையிட, அவன் விளையாட்டாக, டில்லி சுல்தானிடம் அதற்கான ஒப்புதலை வாங்கிவா என்று சொல்ல, கோபம் அடைந்து தில்லி செல்ல என்று கதை சுவாரஸ்யமாக சென்றது. அங்கு சென்றவுடன் தான், தில்லி பேரரசரைக் காண்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை அறிந்தார். ஒரு நாள் தில்லி நடு வீதியில் இரண்டு ஜவான்கள் அவர்களது பாரசீக மொழியில் சண்டை போடுவதை மிகவும் கவனமாகவும், சுவாரஸ்யமாகவும், பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வழக்கு தில்லி பேரரசர் சபைக்குச் சென்றது. அப்பொழுது அங்கு இருந்தவர்களை எல்லோரும் அரசர் விசாரித்தார். ஆனால் எவராலும் அவர்கள் பேசிய சம்பாஷணையை நடந்தது நடந்தபடி கூறமுடியவில்லை. வேதத்தை ஒரே தடவை குரு சொல்ல, அதனை உடனே புரிந்து கொண்டு, அதனை பிறருக்கு சொல்லித்தரும் அளவுக்கு புகழ் பெற்ற ஒரு ஏகசந்தக்ராஹியான, ஜகந்தாரையும் அரசன் கேட்டான். பாரசீக மொழி தெரியாவிட்டாலும், மனதில் க்ரஹித்ததை அப்படியே மன்னனிடம் சொல்ல, பேரரசன் ஆச்சரியத்தில் மூழ்கினான். அவரது புலமையை அறிந்து அவரை தனது ஆஸ்தான பண்டிதராக நியமித்தான்.
Lanvangi film .jpg
பேரரசன் சொக்கட்டான் விளையாடுவதில் வல்லவன். இருந்தாலும் அவன் ஜகன்னாதரை வெல்ல முடியாததால் அவனுக்கு பரிசாக இராஜவம்சத்து பெண் “லவாங்கி” என்பளை மணமுடித்து வைத்தான். லவாங்கியின் பேரிலும், தனது முதல் மனைவி, காமேஸ்வரியின் பேரிலும் இரண்டு காவியங்களைப் படைத்தார். தனது புலமையின் திறமையால் மொகலாய சம்ஸ்தானத்தில் உள்ள முகமதிய பண்டிதர்களை எல்லாம் தனது வாதத்திறமையால் வென்று, சமஸ்க்ருதம், பாரசீக மொழியான அரபிக்கும் முன்னம் வந்த தேவ மொழியென்பதை நிலை நாட்டினார்.
இவரது படைப்புகளில் சிறந்தது ரஸகந்தாரா, கங்காலஹரி, அம்ருதலஹரி, கருணாலஹரி, லக்ஷ்மீலஹரி, பாமினிவிலாசா. இரவு, வானம், குளிர்காலத்தில் சூரியன் தென் கிழக்கு திசைக்கு அக்னியைத் தேடிச் போவது, பெண்கள் மனதில் காமன் சஞ்சலத்தை ஏற்படுத்துவது, என்பதையும் குளிர்காலத்தில் தான் ஆடைக்கும் பெண்ணிற்கும் எங்கு செல்வது என்பது போன்ற ச்லேடையான ரசமான விஷயங்களை ஒரு கவிதையில் புனைந்து ஜாகாங்கீரை கவர்ந்தார்.
ஷாஜஹான் காலத்தில் இவரால் அரசவையில் இருக்கமுடியாமல் மஹாராணா ஜகத் சிங்கின் அரசவையிலும், காமரூபத்தில் ப்ராணநாராயணனின் அரசவையில் இருத்தாதச் சொல்வர். இதன் பின் அவரது கடைசி காலத்தில் மனைவி லவாங்கியுடன் காசிக்குச் சென்று வாழ்ந்து வந்ததாகச் சொல்வர். 
அப்பய்ய தீக்ஷிதர் 
இவர் முகமதியப் பெண்ணை மணந்து அவளுடன் வாழ்க்கை நடத்தியதால், சமகாலத்து அப்பய்ய தீக்ஷிதர் ஒருசமயம் இவர் கங்கையில் ப்ராமணர்களுடன் ஒன்றாக இருந்து நித்ய கர்மானுஷ்டானகள் செய்வதையும் நீராடுவதையும் எதிர்த்தார். எவ்வித ஆயத்தமின்றி, தீக்ஷிதர் முன் "கங்கா லஹரியை" புனைந்து பாடினார். ஒவ்வொரு ஐம்பத்திரண்டு செய்யுளுக்கும் ஒரு அடி தண்ணீர் மேலேறி அந்தக் காவியம் முடியும் தருவாயில் கங்கையில், ஜகன்னாத பண்டிதரும், லவாங்கியும் ஜலசமாதியானதாகவும் ஒரு தகவல் உண்டு. 

No comments:

Post a Comment