Sunday, December 7, 2014

Garuda - King of Birds

நமது பாட்டி தாத்தா நமக்கும் நமது குழந்தைகளுக்கும், நமது பேரக் குழந்தைகளுக்கும் சொல்லும் கதைகளில் முக்கியமானது, “கஜேந்த்ர மோக்ஷம்”.
பாண்டிய கண்டாதி ராஜன் இந்திரத்யும்னன் மலய பர்வதத்தில் பகவானை த்யானித்துக் கொண்டிருக்கும் போது, அகஸ்தியர் அங்கு வர, அவரை கவனியாததால் ஏற்பட்ட சாபம் கஜேந்த்ரனாக அவதரித்து த்ரிகூடமலையில் வருணனுடைய குளத்தில் தனது ஸஹாக்களுடன் இருக்கையில், ஹூஹூ என்ற கந்தர்வன் தேவலர் என்ற மகரிஷியின் சாபத்தால் அங்கு முதலையாக அவதரித்து, கஜேந்திரனின் கால்களைப் பீடிக்கயில், பல வருடங்கள் தனது கால்களை அதனுடைய பிடியிலிருந்து காப்பாற்ற முடியாமல் “ஆதிமூலமே” என்று அறற்றி ஸ்ரீமன் நாராயணன் கருடன் மேல் அமர்ந்து வந்து அவர்கள் இருவருக்கும் மோக்ஷம் அளித்ததாக வ்ருத்தாந்தம்.
---------------------------------------------------------------------
ஸவை ந தேவாஸுர மர்த்ய திர்யங்
ந ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான் ந ஜந்து
நாயம் குணம், கர்ம ந ஸன் ந சாஸன்
நிஷேதஸேஷோ ஜயதாத ஸேஷ
ஸ்ரீ மத் பாகவதம்  8-3-24
--------------------------------------------------------------------------
என்று கஜேந்த்ரன் ஸ்தோத்திரம் செய்த்தாகச் சொல்வர். 
சிறுவயதில் இக்கதை நம்மைத்தூங்கவைக்கவும், உணவு உண்ணவும் ஏதுவாக இருந்தது. வயது முதிர்ந்தவுடன் இதனை ஆராய்ச்சி செய்கிறோம்.
  1. யானை 100 வருடங்கள் எவ்வாறு குளத்தில் இருக்கும்.
  2. அதனுடன் சண்டை புரியும் முதலை எவ்வாறு அங்கு வந்தது.
  3. சாபம் என்றால் என்ன, விமோசனம் என்றால் என்ன.
  4. ஆதிமூலமே என்று கூட்டால் கடவுள் எப்படி பறந்து வருவார்.
  5. கருடன் மேல் எவ்வாறு அமரமுடியும். சூரியனது கிரணங்கள் அவர்களை ஒன்றும் செய்யாதா?
  6. கருடன் பாம்புகளை சாப்பிட்டு உயிர் வாழ முடியுமா.
மேலே சொன்ன ஸ்லோகப்படி கடவுள் என்பவன் ஒரு பரம்பொருள். அவன் தேவனும் அல்ல, அஸுரனும் அல்ல, மனிதனுமல்ல, மிருகம், பக்ஷி, புழு, பூச்சி முதலியவுனும் அல்ல. ஸ்திரீயுமல்ல, புமானுமல்ல, ஸத்துமல்ல, அஸத்துமல்ல, இத்தனையும் இல்லாமல் எதுவோ அது தான் பரம்பொருள். 
கருட தண்டகத்தின் சாராம்சம்
கருடன் தான் அமரும் இடமும் வாழும் கூடும் வேதங்களே.
வைகுண்டத்திலிருந்து ஸ்ரீமன் நாராயணனை அழைத்துச் செல்லும் வாகனம். பகவான் அதன் முதுகில் உட்கார்ந்து சத்ரு ஸம்ஹாரம் செய்து பக்தர்களை காப்பாற்றுகிறார். ருத்ரை, சுகீர்த்தி என்று இரண்டு மனைவிகள உடையவர். அவரது இறக்கைகள் முள் போன்று கூர்மையாக உள்ளதால், “இரண்டாகப் பிளந்த நாக்குகளையுடைய பாம்புகளைக்” கொல்ல வசதியாக உள்ளது. அந்த இறக்கைகளே அவருக்கு ஒரு அணிகலனாய் உள்ளது. கருடனுக்கு வெற்றியைத்தருவது அவரது இறக்கைகளே. பெரிய பாம்புகளே அவரது உணவு. ஒரு சமயம் தேவலோகத்திலிருந்து தாயின் அடிமைத்தனத்தைக் காப்பாற்ற அம்ருதத்தை எடுத்து வரும் பொழுது, இந்திரனுடன் சண்டையிட்டு, அவனது வஜ்ராயுதத்தால் ஏற்பட்ட வடு ஒரு ஆபரணாமாக அமைந்த்து. கருடன் உண்மையில் மறு உருவம். ப்ராணா, அபானா, சமானா, உதானா வ்யானா என்ற ஐந்து காற்றுகளின்/வாயுக்களின் உருவம். ரிஷிகளின் நண்பன். உனது இறக்கைகளின் வேகத்தால் கடலில் அலைகள் உண்டாகின்றது. அப்பொழுது ஏற்படும் ஓசை பாதாள லோகத்தில் பூமியைத்தாங்கும் யானைகளின் காதுகளை அடைத்து ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. உனது கால்களில் உள்ள நகங்களும், உனது வலிமையான மூக்கும் எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்குகிறது. உனது பற்கள் இந்திரனின் வஜ்ராயுதத்தைவிட கூர்மையானது. ஓம் ஸ்வாஹா என்று அக்னியில் கொடுக்கும் ஆஹூதியை பகவான் நாரயணனுக்கு அளிக்கவல்லவன். வாலகியா என்ற ரிஷிகளின் சாபத்திலிருந்து இந்திரனை காப்பாற்றியவர்.


விஞ்ஞான ரீதியாக

 கருடனைப் பற்றின ஒரு தொகுப்பு

No comments:

Post a Comment