Thursday, August 28, 2014

YAGNA VARAHA MURTHY - ஸ்ரீயக்ஞ வராஹமூர்த்தி

விதுன்வதா வேதமயம் நிஜம் வபுர்
ஜனஸ்தப: ஸத்ய நிவாஸினோ வயம்
ஸடா ஸிகோத்பூத ஸிவாம்பு பிந்துபிர்
விம்ருஜ்யமானா ப்ருஸமீச பாவிதா:
ஸ்ரீயக்ஞ வராஹமூர்த்தியின் சரீரம் வேதமயமானது. ஹிரண்யாக்ஷகனைப் பார்த்து சிலிர்த்து எழுந்தார். அவரது உடலிருந்து சிதறிய மங்களகரமான ஜலத்திவிலைகள் ஜனோ லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம் இவற்றில் உள்ளவர்கள் மேல்பட்டன. இதனால் அவர்கள் தங்களைப் பரம பவித்ரர்களாய் கருதியதோடு, வாக்கினால் பவித்ரர்களாக ஆனதாகக் கூறுவர்கள். அவர்கள் எல்லோரும் யக்ஞ ரூபியாய் துதித்த விவரம் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.

रूपम् तवैतन्ननु दुक्रुतात्मनाम् दुर्दर्नम् देव यदध्वरात्मकम्
छ्न्दाम्सि यस्य त्वचि बाहिम् रोम्स्वाच्यम् द्रुशि त्वन्ग्रिशु चातुर्होत्रम्
स्रुक् तुण्ड आसीत्स्रुव ईश नास्योरिडोदरे चमसा: कर्ण्ररन्ध्रे
प्रासित्रमास्ये ग्र्स्ने ग्र्हास्तु ते यच्च वर्णम् ते भगवननिहोत्रम्

யக்ஞமும் யக்ஞ வஸ்த்துக்கள்       வராஹ மூர்த்தியின்
                                       அவயவங்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
காயத்ரீ முதலிய சந்தஸ்ஸுக்கள்     - இந்த்ரியத்திலும்
பர்ஹிஸ் என்ற தர்பத்தினை          - ரோமங்களிலும்
யக்ஞ நெய்யினை                    - கண்களிலும்
நான்கு ரித்துவிகளால் செய்யபடும்
கர்மாவை                            - கால்களிலும்
ஸ்ருக் என்ற ஜுஹூவை             - முகத்திலும்
ஸ்ருவம்                             - மூக்குகளிலும்
(நெய்யை ஹோமபாத்திரத்தில் விடும் க்ருங்காலி மரத்தினால் செய்த கரண்டி)
புரோடசம்                           -  வயிற்றிலும்
(ஹவிஸ்ஸை வைக்கும் பாத்திரம்)
சமஸம்                             - காதுகளிலும்
(ஸோம ரஸம், பானத்திற்கும் உபயோகப்படுத்தும் மரத் தட்டுகள்)
பிராசித்யம்                          - வாயிலும்
(ப்ரும்மாவின் ஹவிஸ்ஸை வைக்கும் பாத்திரம்)
கிரஹம்                             - வாய்க்குள் உள்ள த்வாரங்கள்
(உரல் போன்ற ஸோமரஸத்தை க்ரஹிக்கும் பாத்திரங்கள்)
தீக்ஷண்யா                          - வராஹ ரூபம்
(யக்ஞ இஷ்டியை ஏற்படுத்தும் பகவத் ஸவ்ரூபம்)
உபஸத் என்ற இஷ்டியை            - கழுத்து பாகத்திலும்
ப்ராணீ இஷ்டி, உதணீய இஷ்டி       - தித்திப் பற்கள்
(யக்ஞ ஆரம்பத்திலும், யக்ஞ ஸமாப்தியில் செய்யும் இஷ்டிகள்)
பிரவர்க்ய பாத்திரம்                 - நாக்காகவும்
ஸப்யம், ஆவஸத்யமென்ற அக்னிகள் – தலையிலும்
அடுக்கி வைத்த இஷ்டகைகளாகிற சிதை - ப்ராணனாகவும்
ஸோமரஸம்                       - ரேதஸ்ஸாகவும்
ப்ராத, மாத்யந்தின த்ருதீய ஸ்வனம் – இருக்கைகளாகவும்
ஏழு ஸோம ஸம்ஸ்தைகள்         - ஏழு தாதுக்கள்
(அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடசி, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்ற ஏழு ஸம்ஸ்தைகள் தோல், ரத்தம், மாமிஸம், மேதஸ் எலும்பு, மஜ்ஜை, சுக்ரம் என்ற ஏழு தாதுக்கள்)
த்வாதஸாஹம் என்ற ஸத்ரங்கள்    - சரீர ஸந்தியாகவும்
ஸோமலதா ஸம்பந்தம் யக்ஞ ரூபம் – பகவானாகவும்
இஷ்டியை                          - கயிறாகவும்
நமோ நமஸ்தேகில மந்த்ர தேவதா
த்ரவ்யாய ஸர்வ க்ரதவே க்ரியாத்மனே
வைராக்ய பக்த்யாத்ம ஜயானு பாவித
ஞாநாய வித்யா குரவே நமோ நம:
எல்லா மந்திரங்களாகவும், தேவதைகளாகவும், பொருள்களாகவும், ஸர்வ க்ரதுக்களாகவும், எல்லாக் கர்மாக்களாகவும், வைராக்யம், பக்தி இவற்றால் சுத்தப்படுத்தப்பட்ட மனதால உணரப்பட்ட ஞான வடிவாகவும் இருக்கிறார். இத்தகைய பகவானுக்கு (வராஹ மூர்த்திக்கு) அனேக நமஸ்காரங்கள்.





Click here for VARAHA PURANAM IN ENGLISH

முத்துஸ்வாமி தீக்ஷிதர் வராஹ மூர்த்தியை பூஜித்த விதம்
பல்லவி
ஸ்ரீ லக்ஷ்மீ வராஹம் பஜேऽஹம்
ஸ்ரீ லக்ஷ்மீ ஸஹிதம் ஸ்ரித ஜன ஸுபப்ரதம்

அனுபல்லவி
நீல மேக ஜய ஸ்யாமள காத்ரம்
நீலா பூதேவீ ஸ்துதி பாத்ரம்
(மத்யம கால ஸாஹித்யம்)
நீல கண்டஸிவ குரு குஹ மித்ரம்
நிகில பக்த ஜன பயார்தி தாத்ரம்

சரணம்
மங்களாலயாபோகி நுத பதம்
புங்கவ புத ஜன நதம் வேத நுதம்
ஸங்கர ப்ரிய-கரம் குபேர ப்ரதிஷ்டிதம்
ஸங்க சக்ர தரம் க்ருபா-கரம்
(மத்யம கால ஸாஹித்யம்)
பங்கஜாஸன ப்ரமுக ஸேவிதம்
பங்கஜ முக பார்கவீ பாவிதம்
பங்க ஹர தாம்ரபர்ணீ தீரஸ்தம்
ஸங்கட ஹர ஸதானந்த ஸஹிதம்

No comments:

Post a Comment