Sunday, July 27, 2014

Paramasiva worships Sangarshana

இவுவுலகில் ஏழு த்வீபங்கள். அதில் ஜம்பூ த்வீபம் என்பது ஒன்று. அவற்றில் ஒன்பது கண்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் நாம் வசிக்கும் பரத கண்டம். பாகவதத்தை சுகர் விதுரருக்குச் சொல்லுகிறார். விதுரரோ வியாச மகரிஷியின் அம்சம். தர்ம தேவதையின் அம்சமான விதுரருக்குச் சொல்லித் தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் சுகர் சொல்லி பாகவதத்தை அனுபவிக்கிறார். ஒரு நற்செய்தி நாம் அறிந்திருப்பினும், பிறர் அதனை விரிவாகச் சொல்லும் பொழுது நாம் மேலும் பல உட் கருத்துகளை அறியலாம்.
சுகர் விதுரருக்கு இளாவ்ருத வர்ஷத்தில் ஸ்ரீ பரமசிவன் ஸங்கர்ஷ்ணனை எவ்வாறு பூஜித்தார் என்பதை சொல்கிறார்.
பஜே பஜன்யாரண பாத பங்கஜம்
பகஸ்ய க்ருத்ஸ்னஸ்ய பரம் பராயணம்
பக்தேஷ்வலம் பாவித பூதபாவனம்
பவாபஹம் த்வா பவ பாவமீஸ்வரம்.
இளாவ்ருதம் என்ற கண்டத்தில் பரமசிவன் ஸ்ரிஸங்கர்ஷண மூர்த்தியை ஆராதித்து வருகிறார். இளாவ்ருதம் என்ற பகுதி மேருவின் அடிவாரத்தில் இருக்கிறது. மேருவின் சிகரத்திலிருந்து ஜம்பூ என்ற நதி பாய்கிறது. இங்கு பரமசிவனைத் தவிர வேறு ஒரு புருஷனே கிடையாது. ஒரு சமயம் பார்வதி தேவி பரமசிவனுடன் அங்கு தனிமையில் இருக்கையில் மகரிஷிகள் சிவதரிசனத்திர்காக வந்ததால், அம்பாள் லஜ்ஜைப்பட்டாள். அம்பாளை திருப்திபடுத்த புருஷர்கள் வந்தால் அவர்கள் பெண்ணாகிவிட பரமசிவன் ஆஞ்சயித்தார்அங்கு அம்பாளுடன் இருந்து ஸங்கர்ஷண மூர்த்தியை ஆராதித்து பார்வதிக்கு மந்த்ரோபதேசம் செய்தார் என்று பாகவத்தில் சொல்லப்பட்டதை சுகர் விதுரருக்குச் சொல்கிறார்.
பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ள பரமசிவன் ஜபித்த மந்திரம்
ஓம் நமோ பகவதே மஹாபுருஷாய ஸர்வகுண
ஸங்க்யானா யாநந்தா யாவ்யக்தாய நம இதி

ஜம்பூ த்வீபத்தில் உள்ள ஒன்பது கண்டங்கள்
1) இளாவ்ருதம், 2) பத்ராச்வம், 3)ஹரிவர்ஷம், 4)கேதுமாலம்,
5)ரம்யகம், 6)ஹிரண்மயம், 7)உத்தரகுரு, 8)கிம்புருஷம்,9)பாரதம்
இந்த கண்டங்களில் உள்ள தேவதைகளையும். அவர்களை உபாசிக்கும் பக்தர்களையும், அங்கு ஜெபிக்கப்படும் மந்திரங்களையும் சுகர் ஸ்ரீமத் பாகவத்தில் விஸ்தாரமாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment