Sunday, August 4, 2013

Avani Avittam - Ruk / Yajur / Sama Upakarma

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன? இந்த வருடம் என்று வருகிறது. செயல்முறை, அதற்கான் மந்திரம் மற்றய விஷயங்கள் எல்லாம் வலையில் மிகவும் தெளிவாகவும், சுலபமான செயல்முறை விரிவாகவும் உள்ளது.
ஆவணி அவிட்டம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது
1. காயத்ரி மஹாமந்திரம்
2. பூணல்
3. இடுப்பில் கட்டும் முஞ்சிக் கயிறு
4. மான் தோல்
5. பலாச தண்டம்
6. கௌபீன வஸ்த்ரம்
7. பனை மர இலையில் நெய்த சிறிய குடை
8. தண்டம், கமண்டல ஜல பாத்திரம்
9. குசமென்ற தர்பைபில்
10. ருத்ராக்ஷம் அல்லது துளசி மாலை
11. பிக்ஷா பாத்திரம்
12. ஸமித்து

தவஸ்வியான கஸ்யபருக்கும் அத்திதிக்கும் பகவான் நாரயணன் குழந்தையாக அவதரித்து, ப்ரமச்சாரியா உடனே மாறி, மஹாபலியிட யாசகம் கேட்கச் செல்லுகிறார்.
 ஸ்ரீமத் பாகவதத்தில் வாமனரை
தஸ்யோபநீயமானஸ்ய ஸாவித்ரீம் ஸவிதாப்ரவீத்
ப்ரஹஸ்பதிர் ப்ரஹ்மஸூத்ரம் மேகலாம் கஸ்யபோத்தாத்
த்தௌ க்ருஷ்ணாஜினம் பூமி தண்டம் ஸோமோ வனஸ்பதி
கௌபீநாச்சாதனம் மாதா த்யௌச் சத்ரம் ஜகத: பதே:
கமண்டலும் வேதகர்ப: குஸான் ஸப்தர்ஷயோ தது:
அக்ஷமாலாம் மஹாராஜ ஸரஸ்வத்யவ்ய்யாத்மன:
தஸ்மா இத்யுபநீதாய யக்ஷராட்  பாத்ரிகாமதாத்
பிக்ஷாம் பகவதீ ஸாக்ஷாத் உமாதாதம்பிகா ஸதீ
ஸ ப்ரஹ்ம வர்ச்சஸேனைவம் ஸபாம் ஸம்பாவிதோ வடு:
ப்ரம்ஹரிஷி கன ஸஞ்ஜுஷ்டாம் அத்யரோசத மாரிஷ:
ஸமித்தமாஹிதம் வன்ஹீம் க்ருத்வா பரிஸமூஹனம்
பரிஸ்தீர்ய ஸமப்யர்ச்ய ஸமித்பிரஜூஹோத் த்விஜ:

உபநயனம் செய்விக்கபடும் வாமன மூர்த்திக்கு

1.ஸூர்ய பகவான் காயத்ரி மஹாமந்திரத்தை உபதேசம் செய்கிறார்
2.ப்ரஹஸ்பதி பகவான் தவத்தைக் காக்கும் பூணூலை அளிக்கிறார்
3.முஞ்சிகயிற்றை கஸ்யப ரிஷி இடுப்பில் கட்டுகிறார்
4. பூமி தேவி மான் தோலை போர்த்துகிறாள்
5. சந்திரன் பலாச தண்டத்தை வழங்குகிறார்
6. தாயான அதிதி கௌபீன வஸ்திரத்தை கொடுக்கிறாள்
7. மேலுலக தேவதை குடையை அளிக்கிறார்கள்
8. ப்ரம்ம தேவன் கமண்டலு ஜலபாத்திரத்தை அருளுகிறார்
9. ஸப்த ரிஷிகள் குசமென்ற தர்பை பில் தருகிறார்கள்
10. ஸரஸ்வதி தேவீ ருத்ராக்ஷ மாலையை அளிக்கிறாள்
11. குபேரன் பிக்ஷா பாத்திரத்தைக் கொடுக்கிறார்
12. உமாதேவி பிக்ஷை இடுகிறாள்
இப்படிப்பட்ட வாமனன் மஹாபலியிடம் யாசித்தவுடன் அவாமனனாய் உருமாறி மூவுலகையும் அளந்தார் என்பது புராணம்.

ஆழ்வார்கள் வாக்கில் வாமனனும் அவாமனனும் எவ்வாறு அவதரித்துள்ளார் என்ற ஆராய்ச்சி நூலை திரு கி.ந.சந்தானம் என்பவர் தொகுத்து அளித்துள்ளார். பல தமிழ் பண்டிதர்களின் பாராட்டுதலைப் பெற்ற நூலாகும்.  

No comments:

Post a Comment