Wednesday, September 12, 2012

Ashtapthi-14

अप्रमेयो हृषीकेश: पद्मनाभोऽमरप्रभु:
विश्वकर्मा मनुस्त्वष्ठ: स्थविरोधृव:
ஒரு பெளராணிகர் ஸஹஸ்ரநாம ஸ்லோகங்களின் பதவுரை கருத்துக்களைப் ப்ரவசனம் செய்து கொண்டிருந்தார். “அப்ரமேயோ ஹ்ருஷிகேச பத்மநாபோமரப்ரபுஎன்று பதம் பிரிக்காமல், அந்த வரிமனதில் பதிய ஒரு சுவையான ஒரு நிகழ்வைக் கூறினார். ஒரு சமயம் தேவநாகரி எழுத்துக்கள் தெரியாத ஒருவர், உச்சாரணம் தெரியாமல் சொற்களை வேறுவிதமாகப் பிரித்து “அப்ரமேயோ ஹ்ருஷிகேச பத்மநாபோ மரப்ரபுஎன்று பாராயணம் செய்து கொண்டிருந்தார்.. அவருடன் இருந்தவர், அர்த்தம் அனர்த்தமாக ஆகிவிட்ட்தே என்று அவரை மாற்றிப் பாராயணம் செய்யச் சொன்னார். அன்று இரவு, பதங்களைச் சரியாகப் பிரிக்கச் சொன்னவர் கனவில், பகவான் சொன்னார் “நான் மரப்ரபுவாய் பூரியில் ஜகந்நாதராய் உள்ளேன் ஆகையால் அப்ரமேயோ ஹ்ருஷிகேச பத்மநாபோ மரப்ரபுஎன்பதையும் ஏற்றுக்கொண்டேன்என்றார். மரா மரா அல்லது “மரப்ரபு என்றாலும் ஏற்றுக் கொள்பவர் பரந்தாமன் ஜகந்நாதன் ஒருவனே. அந்த ஜகந்நாதனை பூஜித்து, ஜயதேவர் கண்ணனிடம் ராதை கொண்ட பிணக்கை எவ்வாறு ஸ்ருங்கார ரஸத்துடன் தனது 14வது அஷ்டபதியில் பாடுகிறார் என்று கேட்கலாம்.

2 comments:

  1. சௌக்யமாந நடை. கேட்க அருமையாக உள்ளது.

    ReplyDelete