Friday, August 10, 2012

Snake God Anantha alias Patanjali

ஆயிரம் தலையுடைய அரவரசை
அனுதினமும் துதிப்போம் நாம் அனந்தனை
பாயாய் பரமனுக்கே பணிபுரியும் அவன்
பாரோர் உய்யவே பதஞ்சலி ஆனான்
காயம் திடமாகா ஆயுர் வேதம்
தூய மனம் பெற யோக தத்துவம்
வாய்ச்சொல் வளமுர வகுத்தான் இலக்கணம்
தூயோர் மலர்பதம் தொழுதே நிற்போம்
இந்தப் பாடலை யோகா குரு ஸ்ரீதர் அவர்கள்,அவர்களது குருநாதர் தேசிகாச்சாரியார் (க்ருஷ்ணமாச்சாரி யோக மந்திரம் - KYM) ஊக்குவித்து எழுதச் சொன்ன பாடல். யோக மந்திரம் பூமிபூஜை செய்தபோது அரங்கேறிய இந்தப் பாடல்,திரு ஸ்ரீதர் அமெரிக்கா சென்றபோது யோகா கலையைப்பற்றி பேசும் பொழுது, திருமதி ஸுபா ஸ்ரீவத்ஸனை பாடச் சொல்லி பதிவு செய்யப்பட்டது.
நாகமே வருமாறு நளினமாகவும் இனிமையாகவும் பாடப்பட்டுள்ள இந்தப் பாடலை, வயலின் வித்வான் திரு ஸ்ரீவத்ஸனின் மனைவி திருமதி ஸுபா ஸ்ரீவத்ஸன் பாடியுள்ளார். இவரின் முதல் குருகுலவாசம் அவரது தந்தையார் லாஸ்ஏஞ்சல் (திருவையாறு) க்ருஷ்ணனிடம். பிறகு திரு ராமநாதனின் குருகுலவாசமும் திரு KVN, திரு.ஸ்ரீவத்ஸன் அளித்த இசைப் பயிர்ச்சியும் இவரை கர்நாடக சங்கீத முன்னணி விதூஷியாக நமக்கு அறிமுகப் படுத்தியுள்ளது.  
பதஞ்சலி பற்றியும் அனந்தனைப் பற்றியும் இந்தப் பாடலே நமக்கு பல முக்கியமான செய்திகளை அளிக்கிறது.


2 comments:

  1. The slide shown has fallen very well with the song. The music addition is fantastic. Thanks

    ReplyDelete
  2. Excellent!! The script, the raga, the voice and the visuals all in perfect sync!!

    ReplyDelete