Monday, August 27, 2012

ஏணிப்படிகளில் மாந்தர்கள்

விளையாடும் பருவத்திலேயே படிப்புடன் இசையை பெற்றோர்கள் திணித்தாலும், மாணவர்கள் மனதினிலும், கணினியை மிஞ்சும் மூளையிலும், உடலின் ஒவ்வொரு அசைவிலும், இவைகள் எல்லாவற்றையும் மிஞ்சும் ஆத்மாவிலும் ஒன்றி உட்கார்ந்து அவர்களுக்கு வாழ்க்கையின் நடுவயதில் மனதிற்கு நிம்மதியை அளித்தும் முதிர்ந்த வயதில் அவர்களுக்கு ஒரு உற்ற துணவனாக இருந்தும் அவர்களுடன் என்றும் ஒன்றி இருந்து இசைகின்ற உன்னதமான கலை இசைக் கலை.
சில பாடல்களைப் பாடும் பொழுது, அப் பாடல்களின் பொருள், சந்ததின் நயம், இசை போன்ற அங்கங்கள் நம்மை ஈர்ப்பதால், நம்மை அறியாமல் நாம் உணர்ச்சி வசப்படுகிறோம். இதோ இந்த நிகழ்வினைக்  காணுங்கள்.


ஓடியாடும் பருவத்திலேயே பாடிப் பழக வேண்டும் என்று, கர்னாடக இசையை தூத்துக்குடி திருமதி சேஷா நம்பிராஜனிடம் பயின்று வரும் செல்வன் கெளதம் என்ற மாணவன் பாடிய பாடலைக் கேட்டு ரசித்தீர்கள். பிறப்பிலேயே இணைந்த சங்கீத ஞானம, பெற்றோரின் அளப்பரிய ஆதரவு, சுயமான உழைப்பு மேலும் குருவின் நேர்த்தியான பயில்விக்கும் ஆற்றல் இவை யாவும் இணைந்து அவனைப் பாடவைத்து, இன்று  Vijay TV Air Tel Super Singer Junior 3 Top 7ல் ஒருவனாக உயர்த்தியுள்ளது. முயறசி செய்து பயின்று இன்று வளர்ச்சி அடைந்துள்ளான். 
மொஹஞ்சதாரோ ஹரப்பா நாளிலிருந்து பரிணாம வளர்ச்சியில் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிய இரு முக்கியமான பொருட்கள் சக்கரமும் ஏணிப்படியும். எட்டுவிதமான செல்வங்களும், கல்வியும் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல் சக்கரமும்   ஏணிப்படியும் மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கு முக்கியமானவை.  இந்த இரண்டையும் மேலே கூறிய செல்வம், கல்வி  இரண்டிற்கும் உருவகமாகக் கூறுவர்.  
துத்துக்குடியில் உள்ள இந்த ”ஏணிப்படி மாந்தரை” அங்கு கற்கும் மாணவர்கள் மறக்காமல் பூஜித்தால் சக்கரம் போன்ற அஷ்ட ஐஸ்வர்யங்கள் அவர்களிடம் வந்து சேரும் என்பதில் ஐயம் இல்லை. கெளதமின் தந்தையார் நிகழ்ச்சியின் போது குருவிற்குச் செய்த வணக்கம் என்னை ஈர்த்தது.
இந்தச் சிறுவன் மென்மேலும் வளர்ச்சியடைந்து இசைத்துறையில் சிறந்த இடத்தைப்பெற்று  முன்னுக்கு வர எங்களது ஆசிகள் என்றென்றும் உண்டு.

No comments:

Post a Comment