Monday, July 30, 2012

Raaga & Music are one but countries are different

இசை மதம், மனிதன் என்ற வறையரைக்கு அப்பாற்பட்டது. அன்று தஞ்சாவூர் ஸமஸ்தானத்தில் மான்பூண்டியா, கஞ்சிரா என்ற அபூர்வமான இசைக்கருவியை உலகிற்கு அர்பணித்தார். இங்கு கஞ்சிரா போன்ற ஒரு வாத்தியத்தைக் கேட்கலாம்/காணலாம். ”யாருக்குத்தான் தெரியும்” இந்த தேவமனோஹரி ராகம். இதோ இங்கே காணும் ஐரிஷ் இசைக் குழுவின் பாடல் தொகுப்பினை கேளுங்கள். அவர்கள் நன்றாகவே தெரிந்துவைத்துள்ளார்கள். 

வடநாட்டின் ராகமான ஹமீர்கல்யாணியில் அமைந்த ஒரு கவ்வாலி பாடல். ஆனால் பாடுவதோ ஒரு ஐரோப்பியர்.
அல்ஜீரிய நாட்டின் அழகான மனதிற்கு இதமான மத்யமாவதி பாடல்

இது ஒரு ஆப்ரிக்க இசை. அபரிமிதமான தொகுப்பு. நம் மனக்கண் முன் கொண்டு நிறுத்தும் ப்ருந்தாவன சாரங்கா. MSS அம்மா அவர்கள் பாடிய ஸ்ரீரங்கபுர விஹாரா பாடல் கேட்கும் பொழுது, நான் அந்த பாடலை பாடி விடும் ஒரு துடிப்பு எழும். ஆனால் பாடும் பொழுது அவர் பாடிய நுணுக்கம் நம்மிடம் வராதபோது ஒரு மலைப்பான அனுபவம் தோன்றும். அதே போல் இந்த ஆப்ரிக்கர் கிதார் வாசிக்கும் பொழுது எவ்வளவு சுலபமாக வாசித்துள்ளார் என்று தோன்றுகிறது. நீங்களும் முயற்சியுங்கள். சுலபமா அல்லது கடினமா என்பதை நீங்களே உணர்வீர்கள்.

Sunday, July 29, 2012

Nadhamuni Nanaji's 9th Aaradhana Festival

ஸ்ரீ குருப்யோ நம:
நிகழும் நந்தன வருடம் ஆடி மாதம் 17ம் நாள் புதன்கிழமை
(1st  August 2012)
பௌர்ணமித் திங்களன்று
பூஜ்ய ஸ்ரீ நாதமுனி நாராயண ஐய்யங்கார்
அவர்களின் ஒன்பதாவது ஆராதனை விழா
புதிய எண் 19  பழைய எண் 10, D -பிளாக்
சம்பங்கி தெரு, மேற்கு மாம்பலத்தில் நடைபெற உள்ளது.
அன்று தங்களது குடும்பத்துடன் வந்து
குருநாதரின் ஆசியைப் பெறவும்
அன்றைய நிகழ்ச்சி நிரல்
மதியம் 2.30மணி- 4மணி வரை விஷ்ணு ஸஹஸ்ரநாமபாராயணம்
மாலை 4.30 மணி  07.30 மணி வரை நாம ஸங்கீர்த்தனம்

Sunday, July 8, 2012

Hari Hari Narayana Hari Govinda Narayana


ஹரி ஹரி நாராயணா
ஹரி கோவிந்த நாராயணா
ஹரி கோபால நாராயணா
ஸ்ரீஹரி நாராயணா
ஹ்ருஷிகேசா நாராயணா
பர்தீஸா நாராயணா

Friday, July 6, 2012

We Were Born Too Early


இன்று இருப்போர் நாளை இல்லை.
இன்றே உலகில் உள்ள புதினங்களைச் 
சொல்லக் கேட்டு, பார்த்து மகிழ்வோம்.
கண்ணாடி இழையில் மின் வலை விரிந்து 
உலகை உட்கொண்டுள்ளது. 
இது என்ன மயன் மாளிகையா 
அல்லது சொப்பன  உலகமா? 
இல்லை இல்லை நிஜ உலகம்! 
இது மனதை மயக்கும், மூளைக்கு சவாலான 
ஒர் அறிவியல் கண்டுபிடிப்பு.
இதனை எனக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தார்.
நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.