Monday, August 22, 2011

Hey Shyama Sundara Hey Sai Sundara

ஹே ஷ்யாம ஸுந்தரா ஹே ஸாயி ஸுந்தரா
மின் வலையில் சில பாடல்களைத் தேடும் பொழுது “ஆடல் கலையே தேவன் தந்தது என்ற சாருகேசிப் பாடலைக் கேட்டேன். இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனது குருநாதர் திரு Dr.S.ராமநாதன் அவர்கள் திரைப் படப்  பாடல்களை எவ்வாறு ரசிப்பார் என்பது நினைவிற்கு வந்தது. 
அன்று சாருகேசி வர்ணம் கற்பிக்கும் நாள். “வசந்த முல்லை போலே வந்து என்ற பாடலைப் பாடி அதில் சாருகேசி ராக அபூர்வப் பிடிகளைப் பற்றி எடுத்துச் சொல்லி வர்ணப் பாடலை வர்ணமாக குழைத்து வரைந்தார்.
ஒரு அருமையான சாயீ நாமாவளியைக் கேட்ட பொழுது “கல்யாணத் தேன் நிலா என்ற திரைப் படப் பாடல் நினைவிற்கு வந்தது. எனது உறவினர் ஒருவர்க்குப் பிடித்த இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது, அந்த நாமாவளியைப் பாட வேண்டும் என்ற அவா எழுந்தது. 
கர்நாடக சங்கீதமோ அல்லது திரைப்படப் பாடலோ, சங்கீதமும் ஸாஹித்யமும் நன்றாக இருந்தால் பாடல் நம்மை ஈர்க்கின்றது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்யாமசுந்தரனுக்காகப் பாடின இந்தப் பாடலுக்கு ஸாயி சங்கரன் ம்ருதங்கம் பக்க பலமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment