Sunday, March 20, 2011

Holi Festival

ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?
அதனைப் பற்றி பல செய்திகள் உள்ளன.
ப்ரஹ்லாதனைக் கொல்ல ஹோலிகா என்கின்ற அவளது அத்தை செய்த சதியால் அவளே மாண்ட நாளைக் கொண்டாடுவது ஹோலிப் பண்டிகை.
சிவனது மூன்றாவது கண்ணால் காமன் எரிக்கப்பட்டு பிறகு அரூபமுடன் சதியுடன் சேர்ந்த நாளை கொண்டாடுவதும் இந்த நாளில் தான்.
ப்ரஜ பூமியில் (நந்தனது க்ராமத்தில்), “லத்மர் ஹோலி என்ற பண்டிகையை யசோதா ஆரம்பித்துவைத்தார்கள். கண்ணனின் நிறமோ கருப்பு.  ராதையின் நிறம் சிவப்பு. கண்ணனை மகிழ்விக்க ராதையின் முக வண்ணத்தை மாற்றி ராசலீலை கொண்டாடிய நாள்.
ப்ரிது என்கின்ற ஒரு ராக்ஷஸி பல வரங்களை வாங்கியும், சிறுவர்களை உண்டு வந்ததால் சிவனால் சபிக்கப்பட்டு, நாட்டை விட்டு ஒட்டிய தினம்.   

1 comment:

  1. வசந்தத்தை வருக வருகவென்று அழைக்கும்
    ஹோலிப்பண்டிகையை கொண்டாடுவதர்க்கான காரணங்களை அறிந்துகொண்டோம்.

    ReplyDelete