Friday, September 17, 2010

பாரதியின் பாஞ்சாலி சபதம்

புரந்தர தாஸர், அன்னமைய்யா, ராமதாஸர், மும்மூர்த்திகள் மற்றும் பல வாகேயக்காரர்கள் பரம்பொருளை தங்கள் இன்னல்களைக் களைய அழைக்கும் போது பாஞ்சாலி, ப்ரஹ்லாதன், துருவன், கஜேந்திரன், விபீஷணன், சுக்ரீவன் என்று ஒரு பெரிய பட்டியலைச் சொல்லி, அவர்களுக்கு அடைக்கலம் தந்த மாதிரி எங்களையும் காக்க வரமாட்டாயோ என்று அழற்றுவர்.  அந்த வரிசையில் பாரதியின் அழகு மிகு கவிதைக்கு என் தந்தை ராகஸ்ரீ இசை வடிவம் கொடுத்துள்ளார். அதனைப் பருகுவோம்.
இந்தப் பாட்டிற்கும் பின் வரும் விடுகதைக்கும் என்ன சம்மந்தம் என ஐயம எழுகிறதா?
திருமதி அகிலா சிவராமன், இயக்குனர் சென்னை தொலைகாட்சி நிலையம், விடுகதை ஒன்றினை திரு.கி.வா.ஜா கூறியதாகச் சொன்னார். திரு.கி.வா.ஜா அவர்களுக்கு ஒரு கிராமவாசி இந்த விடுகதையை விடுவிக்கச் சொன்னார். 
அத்தினத்துக்கும் ஒட்டைக் கைக்கும் எத்தினி தூரம்.
ஆனாலும் நடக்குதப்பா சேலை வியாபாரம்.
இந்த விடுகதையை விடுவியிங்கள் 

1 comment:

  1. பாஞ்சாலி சபதம் பாடல்கள் ராக மாலிகையில் பரவசமூட்டியது,பின்னணி இசையையும் தாளப் பின்னணியையும் குரலிசையுடன் இணைத்தவிதம் பாராட்டத்தக்கது.
    விடுகதைக்கும் எங்களுக்கும் ------அத்தனை தூரம்.
    விடுவித்தால் இல்லையே தூரம்.
    பாடி பரவசப்படுத்தியதுபோல் விடுகதையையும் விடுவித்து மகிழ்விக்கவும்.

    ReplyDelete