Tuesday, August 31, 2010

விட்டம் கழிந்த எட்டு

நாம் எல்லோரும் அறிந்தது கிருஷ்ண ஜெயந்தி. பௌர்ணமியன்று வரும் ஆவணி அவிட்டம் கழிந்த எட்டாம் நாள் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி கண்ணனின் ஜனன நாளாக கொண்டாடுகிறோம். வட நாட்டில் சுக்ல பக்ஷ அஷ்டமியை விசாக நக்ஷத்திரத்தில் பிறந்த ராதையின் ஜனன நாளாக கொண்டாடுவர்.

ராஸப்தம் குர்வத தரஸ்தோ ததாமி பக்திம் உத்தமம்
தாஸப்தம் குர்பத பஸ்சாத் யானி ஸ்ரவண் லோபத
எவனது வாயில் “ரா ஸப்தம் வருகிறதோ அவனுக்குச் சிறந்த பிரேம பாவ பக்தியை அளிக்கிறேன். ஆனால் தா சப்தம் கேட்கவும் அந்தப் பெயரை முழுமையாகக் கேட்கவும் பின்னாலேயே செல்வேன். “ராம ராமஎன்ற ஸப்தத்தை கேட்டவுடன் அனுமன் வருவது போல் “ராதே ராதே என்று சொன்னால் கண்ணன் ஓடி வந்து நிற்பான்.

No comments:

Post a Comment