Saturday, June 26, 2010

உகாபோகங்கள்



Ugabhogas, in Kannada, are melody based compositions that are reminiscent of vachanas (Kannada poetry that originated in 12th century). Like 'suladis' and 'kirtanes', 'ugabhogas' were produced and popularised by the Haridasa movement during the early 15th CE.
Ugabhogas are attractive for those who may not understand the nuances of raga as they pay attention to meaningful lyrics. The lyrics of ugaabogas are typically either devotional or philosophical in nature. They are rendered sometimes with rhythm(tala) similar to Aalaap with tala in Hindustani Music.
Mr.Satyanarayana, who has done extensive research on Ugabhogas states,” The Ugabhoga be summarized as a piece of Sahitya of a usually Religious Themes which is displayed in a more or less ex-tempore of musical background and essentially Liturgical in importance, rather than musical. It took its birth as a part of the Suladis, but later – probably in the 15th / 16th centuries.  When the suladis themselves culminated and settled into their presentation – emerged as a distinct entity. Whatever its origin or history, it is a beautiful music form and unique to its mother, “Karnataka”.
உகாபோகம் என்பது அழகான ஒரு ஸங்கீத ஸாஹித்ய உருப்படியாகும். அது சமய ஸம்பந்தமான விஷயங்களைத் தெரிவிக்கும் ஸாதனமாகும். முதலில் ஸூளாதிகளில் ஒரு அங்கமாக இருந்ததாகவும் பின் 16ம் நூற்றாண்டிற்குப் பின் தனி உருக்கொண்டதாக கூறுவார்கள். ஸூளாதிகளும் உகாபோகங்களும் கர்நாடக தேசத்தில் கலாச்சார மண்ணை வளமாக்கியது என்றும் சொல்வர். இனிமையான பக்திப் ப்ரவாஹத்தினாலும், அதில் கூறப்பட்ட சமூக நீதிகளாலும் இவை இரண்டும் இன்று ஸங்கீதத்தில் முக்கிய அங்கமாக மாறி விட்டன. மேலும் இவை இரண்டும் பகவத் பக்தியையும் உயர்ந்த சாஸ்திர அறிவையும் புகட்டுகின்றன. கர்நாடக ஹரி தாஸர்கள் சங்கீத உலகத்திற்கு இங்கே கூறப்பட்டுள்ள உருப்படிகளை அளித்துள்ளார்கள்.
உகாபோகம், ஸூளாதிகள், ப்ரபந்தம் அல்லது கீதம், அலங்காரம், தில்லானா, பதம், வ்ருத்த நாமா, ரகளெ, ஷட்பதி(பாமினி, வார்தீகம்), த்ரீபதி, சௌபதி, ஸாங்கத்ய, குண்டக்ரியே, தண்டகம், பத்யம், கத்யம், வசனம், ஜாணபத கேயளு (நாட்டுப்புறப் பாடல்கள்), லாவணி(காவடிச் சிந்து), ஸோபானே, குறவஞ்சி பதங்கள், உதயராக பாடல்கள் அல்லது ஜோஜோ லாலி பதங்கள்.
பிற்காலத்தில் இந்த 22 உருப்படிகளை எல்லாம் கீர்த்தனை, ஸூளாதி, உகாபோகம் என்று மூன்று முக்கியமான பகுதிகளாக கன்னடத்தில் பிரித்தார்கள். இதே போல் தெலுங்கிலும், தமிழிலும், மலையாளத்திலும் பல முக்கிய பகுதிகளாக வகைப் படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
ஸூளாதிகளைப் பற்றி இங்கே மேலும் அறியலாம்.

No comments:

Post a Comment