Thursday, June 24, 2010

அந்த நாள் பாணி - மன நிறைவான ஸங்கீதம்

மியூசிக் அகாடெமியில் அன்று சற்றே பயத்துடன் பாடி விட்டு திருமதி ஜெயா மாமி அரங்கத்தை விட்டு வெளியே வந்தார்கள்.  திரு செம்மங்குடி மாமா கொடுத்த அந்த புகழாரத்தை இன்றும் மறக்காமல் நினைவுகூர்ந்து அதில் திளைக்கிறார் ஜெயா மாமி. அப்படி என்ன சொன்னார்? “இன்னிக்கி ஐயங்கார்வாள் புடவை கட்டிண்டு அகாடெமியை ஒரு கலக்கு கலக்கிட்டார்.
ஜெயா மாமி ஹரிகேசநல்லூர் பாகவதர், சாத்தூர் சுப்ரமணிய பிள்ளை, வி வி சடகோபன் இவர்களிடம் கற்றாலும் திரு அரியக்குடி வழி பாடத்தினை இன்றும் கையாளுகிறார். அதற்கான புகழாரம் அன்று கிடைத்தது;இன்றும் அவரை, கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள், ரசிப்பவர்கள் பாரட்டிவருகின்றனர். இதோ அதற்கு ஒரு சான்று இந்த பாட்டு.

1 comment: