Wednesday, April 21, 2010

தமிழ் மாதங்கள்

அவரவரது பிறந்த ஊர், பெற்றோர், தாய் மொழி இவற்றை மிக உயர்வாக பேசுவது எல்லோருடைய இயல்பு. தமிழ் உயர்ந்த மொழி தான். ஆனாலும் பல சொற்கள் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து வந்துள்ளது என்பதையும் நாம் உணர வேண்டும். திருமூலர் தனது திருமந்திரத்தில் ஸம்ஸ்க்ருத மொழி வல்லுனர்களை புகழ்ந்து எல்லா மொழிகளும் உயர்ந்தது என்று உணர்த்தியுள்ளார்.
நமது தாய் மொழி தமிழானாலும் பிற மொழிகளில் உள்ள சிறப்புகளை உணர்ந்து அதனை அந்த நாட்களிலேயே நன்றாக பயன்படுத்தி உள்ளதை தமிழ் மாதங்களின் பெயர்கள் ஸம்ஸ்க்ருத மொழியிலிருந்து பின்பற்றியுள்ளதிலிருந்து தெரியவருகிறது.
ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் முக்கிய நாட்களாகும். மேலும் அது ஒரு சில நக்ஷத்திரத்தை ஒட்டியே வரும். அந்த மாதத்தின் பெயரும் அதனை ஒட்டியே வைத்துள்ளனர்.  
ü  சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு அந்த மாதம் சித்திரை ஆயிற்று
ü  வைசாகா என்ற ஸம்ஸ்கருத சொல் விசாகம் என்று மருவி வைகாசி மாதம் என  அழைக்கப்பட்டது.
ü  அனுராதா நக்ஷத்திரம் அனுஷம் அல்லது அனி ஸகாரா என்பதிலிருந்து வந்தது. அது மருவி ஆனி என்று சொல்லப்பட்டது
ü  பூர்வாஷாட / உத்திராஷாடா நக்ஷத்திரம், ஆஷாடா மாதத்தில் பௌர்ணமிக்கு ஏற்றமான நக்ஷத்திரம். ஆஷாடம் மருவி ஆடி ஆகிற்று.
ü  திருவோணம் என்ற ஸ்ராவண நக்ஷத்திரம், ஸ்ரவணி என்பது ஸம்ஸ்க்ருதத்தின் மூலச் சொல். அந்த ஸ்ர ஆவணி, ஆவணியாக அழைக்கப்படுகிறது.
ü  பூர்வ ப்ரோஷ்டபதா/உத்தர ப்ரோஷ்டபதா நக்ஷத்திரங்களின் மூலச் சொல் ப்ரோஷ்டபதா. அது புரட்டாதி என்று ஆகி, புரட்டாசி என்று மருவியது.
ü  அஷ்வயுஜா அல்லது அஸ்வினி என்ற அஸ்வதி நக்ஷத்திரம்.– அச்வயுஜி என்பதிலிருந்து ஐப்பசியாயிற்று.
ü  கார்திகா அல்லது க்ருத்திகை நக்ஷத்திரம் கார்த்திகை மாதத்தை கொண்டது.
ü  திருவாதிரை நக்ஷத்திரம், ஆருத்ரா அல்லது மார்கசிர்சி என்று ஸம்ஸ்க்ருதத்தில் அழைக்கப்படும். மார்கசிர்சி மார்கழி என மலர்ந்தது.
ü  பூசம் / புனர்பூசம் ஆன புஷ்யம் / புனர்புஷ்யம், புஷ்ய தைச்யம்  என்பதிலிருந்து  தை என மருவியது.
ü  மகம் என்ற நக்ஷத்திரத்தின் முதல் எழுத்து ம உடன் “சி இணைந்தது வைகாசி புரட்டாசி ஐப்பசி மாதங்கள் போல் மாசி மாதமாக மாறியது.
ü பூர்வ பல்குனி / உத்திர பல்குனி,  பல்குனி என்ற மூலச் சொல் பங்குனி மாதத்தை உருவாக்கியது.

2 comments:

  1. எல்லா மொழிகளும் பிற மொழிச்சொற்களை
    ஏற்றுக்கொண்டுள்ளன அப்பொழுதுதான் மொழி வளரும் ஆனால் ஒரு மொழியின் தன்மைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவேண்டும். இதைத்தான் அக்காலத்திலேயே பெரியோர்கள் செய்துள்ளார்கள்,

    ReplyDelete
  2. இதை எங்கிருந்து காப்பி அடித்தீர்கள்.நான் ஏற்கனவே இதை எழுதிட்டேனே,ஏன் இப்படி காப்பி அடிச்சி பதிவு போடரிங்க?

    ReplyDelete