Sunday, April 4, 2010

திருமூலரும் பதஞ்சலியும்



பதஞ்சலி என்று படித்தாலே நம் சிந்தனைக்கு வருவது யோகா ஒன்றே. தமிழ் சைவ சித்தாந்த நூல்களைப் புரட்டினால் சில சுவையான செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.
சுமாராக பத்து ஆண்டுகள் கிறிஸ்து பிறப்பதற்கு முன் உள்ள ஏடுகளைப் புரட்டினால் திருமூலர் எழுதிய திருமந்திரம் நமக்குத் தரும் ஒரு செய்தி
நந்தி அருள் பெற்ற நாதரை நாடுவோம்
நந்திகள் நால்வர் சிவ யோக மாமுனி
அன்று தொழுத பதஞ்சலி வ்யாக்ரமர்
என்றிவர் என்னோடு எண்மருமாமே
நந்தியின் அருளால் அவரது நாதனாம் சிவனின் பாத கமலத்தைப் பெறுவோம். ஸநகர், ஸநந்தனர், ஸநத்சுஜடர், ஸநத்குமாரர் என்ற நால்வருடன் சிவ யோக மாமுனி, பதஞ்சலி, வ்யாக்ரம்பரதர், திருமூலர் சேர எண்மரானார்.
பழைய காளி கௌஸ்துவம் சொல்லும் அறிய செய்தி “தில்லையிலே சிவனும் காளியும் தங்களது திறனைக் காண்பிக்கும் போட்டியிலே நூற்றி எட்டு கரணங்களை செய்து காண்பிக்கையில் பதஞ்சலியும் வ்யாக்ராமபாதரும் அங்கு பார்வையாளராக இருந்து நமக்கு “நாட்டிய யோகா என்ற கலையினை நமக்கு வழங்கியுள்ளார்கள். அதில் பல நாட்டியத்திற்கும் சில உடல் பயிற்சிக்கும் உதவுவதாக உள்ளது.
-       மின் வலையில் தேடிய அறிய பொக்கிஷம்   

2 comments:

  1. Very useful and interesting anectode.

    ReplyDelete
  2. நாட்டிய யோகத்தால் நமச்சிவாயத்தை அடையலாம்.நாத யோகத்தால் அந்த நாத பிரம்மத்தையே அடையலாம்.

    ReplyDelete