Tuesday, March 16, 2010

அஷ்டாக்ஷர மந்திரம்

மஹா பாரதம் சொல்லும் மந்த்ரம்
“ஸர்வ ஸாஸ்தரமயீ கீதா ஸர்வ தேவமயோ  ஹரி
ஸர்வ தீர்த்தமயீ கங்கா ஸர்வ வேதமயோ மனு:
கீதா கங்கா காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே
சதுர் ககார ஸம்யுக்தே புனர் ஜன்ம ந வித்யதே


“ஹே பரமாத்மாவே கங்கையும் கீதையும் காயத்ரியும் துளஸியும் ப்ரஸித்தி பெற்ற கோபீ சந்தனமும் ஸாளக்ராம பூஜையும் அவ்விதமே ஏகாதஸியும்
பகவன் நாமாக்ஷரங்களும் ஆகிய இந்த எட்டும் கலிகாலத்தில் ப்ரயத்தினமின்றியே தங்களுடைய ப்ரசாதத்தை வ்ருத்தி செய்து கொடுத்து
விரைவாக முக்தியைக் கொடுக்கின்றவைகள் என்று மகரிஷிகள் உபதேசிக்கின்றனர். ஹே ஈசா அந்த எட்டிலும் என்னைப் பற்றுள்ளவனாகச் செய்யவேண்டும் என்று பட்டத்த்ரி தனது நாராயணீயத்தில் முக்திக்கு வழிகளாகக் கூறுகிறார். “ஒம் நமோ நாராயணாயஎன்ற அஷ்டாக்ஷர மந்திரத்தில் இந்த எட்டும் அடங்கும்.

ஏகம் சாஸ்த்ரம் தேவகீபுத்ர கீதம் ஏவ
ஏகோ தேவா தேவகீபுத்ர ஏவ
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி
கர்மாப்யேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா
இதையே ராகஸ்ரீ தனது ஸாஹித்யத்தில் கூறுகிறார்

4 comments:

  1. நாத வடிவில் நாராயண நாமத்தின் பெருமையை நன்கு இசைத்து உணர்த்தியமைக்கு நன்றி

    பாடத்தெரிந்தவர்கள் பாடட்டும் ஜெபிக்க தெரிந்தவர்கள் ஜெபிக்கட்டும்

    ReplyDelete
  2. Superb graphic work of the handwritten song inside a Pad.

    ReplyDelete
  3. chitha,it was lovely hearing your voice ,but this time we could also look at your handwriting and the last kutti flower drawing was absolutely you

    ReplyDelete
  4. எழுத்து வடிவமைப்பு என் தந்தை ராகஸ்ரீ. அதை சுற்றின வேலைப்பாடு மின்வலை உபயம். பாடும் விதத்தை சரிசெய்தது எனது தமக்கை பூமா அவர்கள். பாடியதற்கு உதவியது Yamaha Key Board. என்னைப் பாடவைத்தது அந்த இறைவன். இது தொடர அந்த இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete