Wednesday, March 10, 2010

ஆத்யந்த பிரபு

ஏழரை சனியினால் அவதிப்படுபவர் புலம்புவதும், குருவின் நல்ல பார்வையினாலும், சுக்ர தசையின் பரிவினாலும் மகிழ்வதும் நம் இயல்பு. சனி க்ரஹத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிள்ளையாரையும் அனுமனையும் தொழுதால் மட்டுமே விடிவுகாலம் பிறக்கும். அவ்விருவர் இணைந்த கோலம “ஆத்யந்த பிரபு என்று போற்றுவர். சென்னையில் மத்ய கைலாஷ் கோவிலில் இந்த பிரபுவை தரிசித்து நிம்மதி அடையலாம்.
ராவணன் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த நவக்ரஹங்களை அனுமன் விடுவித்ததால், சனி பகவான், அனுமனைப் ப்ராத்திபவர்களுக்குச்  சிறிது கருணை காட்டுவதாக வரம் அளித்தார். கயிலை சென்று விநாயகரை சனி  பிடிக்கையில், ‘நாளை வருகிறேன் என்று தனது முதுகில் எழுதி வாங்கிக்கொண்டதால், தினமும் வந்து பிள்ளயாரை, நாளை பிடிப்பதாகச் சொல்லி சனி திரும்பிவிடுகிறார். அனுமனை பிடிக்க சனி பகவான் அனுமனின் தலையில் உட்கார, அனுமனும் ராமநாம மகிமையால் பெரிய மலைகளை தூக்கி தன தலையில் வைக்க, சனி பகவான் ஏழரை நாழிகையில் தப்பித்து ஓடி விடுவதாக ஒரு ஐதீகம்.
ஆகையால் நாமும் ஆத்யந்த பிரபுவை ஆராதிப்போம். சனியின் கஷ்டங்களிலிருந்து விடுபடுவோம்

1 comment:

  1. மத்திய கைலாஷ் சென்று ஆத்யந்த பிரபுவை தரிசிக்க இயலாத எங்களுக்கு ராகஸ்ரீ மூலம் அந்த பாக்கியம் கிடைத்தது. தரிசிப்பதால் உண்டாகும் பலன் எங்களுக்குக் கிடைக்கட்டும்.

    ReplyDelete