Sunday, February 14, 2010

தெய்வத்தின் குரல்-சங்கீத பாதை

காஞ்சி மஹா பெரியவாள் காட்டும் சங்கீத பாதை 
தெய்வத்தின் குரல் என்ற தொகுப்பிலிருந்து சில துளிகள்
கலை என்பதற்காகவே பரவட்டும், பரப்பட்டும். சந்தோஷம் தான். ஆனாலும் ஆதியிலிருந்து இந்தக் கலைகளுக்கு எது லக்ஷ்யமாயிருந்ததோ அது மறந்து போகுமாறு விட்டுவிடக்கூடாது. ஈஸ்வரனிடம் கொண்டு நிறுத்துவதற்காகத் தான் இவை ஏற்பட்டிருக்கின்றன என்ற நினைப்பு போகக் கூடாது. சரபோஜி போன்ற ராஜாக்கள் கேட்டு கொண்டால் கூட,  ராஜ ஸதஸில் போய்ப் பாடுவதில்லை, நிதி வேண்டாம்; ஈஸ்வர சன்னதி தான் வேண்டும் என்று வைராக்யமாயிருந்த த்யாகையர்வாள் போன்ற மகான்களின் ஐடியல் எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். சாந்த சௌக்யத்தைத் தானும் அடைந்து மற்றவர்களும் அடைவிக்கப்பண்ணுவதாகவே காந்தர்வ வேதத்தை அதற்கான உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துக் காத்துக் கொடுக்க வேண்டும். கானம் பண்ணுவது, நடனம், நாடகம் மூன்றும் சேர்ந்து காந்தர்வ வேதம். இதனால் நமக்குப் பணம் வராது. வயிறு ரொம்பாது. இவற்றை கச்சேரி, ஸதிர் என்று பனண்ணுகிறவர்களுக்கு, நடிக்கிறவர்களுக்கு, நடத்துகிறவர்களுக்குத்தான் வயிறு ரொம்புகிறது. பர்ஸ் ரொம்புகிறது. பார்க்கப் போகிற நாம் நம் வயிற்றுக்காக வைத்துக் கொண்டிருப்பதை அங்கே கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருகிறோம். “யுடிலிடி என்ற பாயிண்டில் இப்படி நஷ்டப்பட்டாலும் மனஸுக்கு மகிழ்ச்சி, உல்லாசம், உத்ஸாஹம், பொழுதுபோக்கு என்ற லாபம் கிடைப்பதால் இப்படிச் செய்கிறோம். இது மட்டும் “யுடிலிடிஇல்லையா?

1 comment:

  1. ஆன்மாவின் தேடல் சங்கீதம் இதன் பொருள்
    அறிந்தவர்கள் பொருளை பொருட்படுத்தமாட்டார்கள்
    தெய்வத்தின் குரலில் ஒலிப்பது இதுதான்

    ReplyDelete