Sunday, February 7, 2010

நரசிம்ஹா நன்னு ப்ரோவவே -சோழ சிம்ஹபுரம்

சோழ சிம்ஹபுரம் சோளிங்கபுரமாக வழங்கலாயிற்று. பெரிய மலை சின்ன மலை என இரண்டு மலைகளில் யோக நரசிம்ஹரும் யோக ஆஞ்சநேயரும் நமக்கு தரிசனம் தந்து நம்மை ரக்ஷிகின்றார். சுமாராக ஆயிரத்து இருநூறு படிகள் ஏறி நரசிம்ஹரையும் அறுநூறு படிகள் ஏறி ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம். ஒருவரையொருவர் பார்த்தபடி வீற்றிருக்கும் இந்த மூர்த்திகளின் பெருமை மிக அதிகம். இவர்கள் இருவரை வேண்டி தரிசித்தால் தீராத வியாதிகளும், சித்த பிரமைகளுக்கும் விலகும். பேயாழ்வாரும் திருமங்கை மன்னனும் பாடின ஸ்தலம். வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீநரசிம்ஹ சுவாமிக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகின்றன. சித்திர ரூபமாக போட்டோக் கருவிகளையும் மிஞ்சி விடும்படி உண்மைக்கும் புறம்பில்லாமல் ஆனந்தவிகடனில் 1944ல் பிரசுரித்த சித்திரத்தை கீழே காணலாம்.


த்யாகராஜ ஸ்வாமிகள் பிலஹரி ராகத்தில் நரசிம்ஹா நன்னு ப்ரோவவே என்ற பாடலாலும் பலரஞ்சனி ராகத்தில் ஸ்ரீநரசிம்ஹ மாம்பாஹி என்ற பாடலாலும் அலங்கரிக்கிறார்

1 comment:

  1. அறியாத விஷயத்தை அறிய வைத்தீர்கள்

    ReplyDelete